4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் மத்தி காசியர் வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தர் கதிரித்தம்பி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
வசந்தகாலம் என்றால் அது
உங்களுடன் வாழ்ந்த காலம் தானே!
வாழ்க்கை என்பது இறைவன்
அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு நான்காண்டு கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம் மாறாதே!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
தகவல்:
குடும்பத்தினர்