யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எமைவிட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புச் செல்வமே
31 நாட்கள் எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்
நனவாகும் காலம் வருமுன்
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே
உதிர்ந்து நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள்- எம்
உள்ளத்தில் என்றேன்றும்
உறைந்திருக்கும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டிநிற்கின்றோம்!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Your memory lives on in our hearts forever, rest in peace. YYZ