யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா அருளையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08-10-2022
பன்னிரண்டு திங்களும் நீங்கள் இன்றி
பன்னிரண்டு நிமிடங்களாய்
கரைந்தோடி விட்டதே அப்பா!
எம் குலத்தின் ஒளி விளக்கே
அறிவூட்டி பண்பு கற்று அன்பால் சீராட்டி
தெய்வபக்தியை உரமாக்கி பெருமிதம் கொண்டவரே
எங்களை வாழவைத்து அழகு பார்த்த தெய்வமே
உங்கள் திருமுகம் இனி எப்பிறப்பில் காண்போமோ
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்...
கனவிலும் நினைவிலும் உங்கள்
நினைவுகளுடன் பயணிக்கின்றோம் அப்பா
கோடான கோடி திங்கள் வந்தாலும்
அகலாது உங்கள் பிரிவின் வலி!
நீங்கள் கடவுள் தந்த வரம் அப்பா
எங்களுக்கு எத்தனை முறை
பார்த்தாலும் திகட்டாது உங்கள் இன்முகம்
காலத்தால் ஆறாது உங்கள் இழப்பின் தவிப்பு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீருடன்
ஈசன் பாதம் வணங்குகின்றோம்!
ஆசிரிய பெருந்தகை அமரர் அருளையா மாஸ்ரரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அத்துடன் இந்த இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.உங்கள் மாணவன்...