

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வள்ளிப்பிள்ளை முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-09-2021
ஓராண்டு நினைவலைகள் அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உங்களை போல அரவணைக்க யாருமில்லையே
நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாங்கள்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்!
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அறிவுரைகள்
இல்லாமல் தளர்ந்து போகின்றோம் அம்மா!
ஆண்டவன் அழைப்புக்கு நாங்கள் என்செய்வோம் அம்மா
வாழும் காலத்தில் உங்களை போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீங்கள் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா!
நீங்கள் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயத்தில் இருந்து ஒருபோதும் அழியாது
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!!!