Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 JUN 1939
இறப்பு 18 JUN 2024
அமரர் முருகேசு தனபாலசிங்கம்
வயது 84
அமரர் முருகேசு தனபாலசிங்கம் 1939 - 2024 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தனபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
31 நாட்கள் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 
எத்தனை நாட்கள்  சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-07-2024 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Hazelwick School, Hazelwick School Close, Three Bridges, Crawley, West Sussex, RH10 1SX எனும் முகவரியில் நடைபெற இருப்பதனால் இப் பிரார்த்தனை நிகழ்வில் தாங்கள் கலந்துகொள்வதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.