
யாழ். ஆவரங்கால் சர்வோதய வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவநாதன் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும்,
Agnes அழகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Mariam மீனாட்சி, Alan பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோதி வேலுப்பிள்ளை, செல்வத்துரை மற்றும் அற்புதசிங்கம்(நியூசிலாந்து), பரமசிங்காரம்(ஆவரங்கால்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற உமா, செல்வகுமார், தயாளன், பாலகுமார்(லண்டன்), அமுதினி, நந்தினி, சாமினி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.