

யாழ். அல்வாய் வடக்கு வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு செல்வமாணிக்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி; 28-01-2022
அன்பு கொண்டு எமை ஆட்சி செய்தாய்
அறம் சொல்ல வளர்த்து விட்டாய்
பண்பு சொல்ல பாரினிலே உயர்த்தி விட்டாய்!
ஏணியாய் நீ இருந்தாய்
எம் எண்ணம் எல்லாம்
நிறைந்து நின்றாய்!
முத்தான மூத்தமகனாக
பாசமான சகோதரனாய்
நல்லதோர் தகப்பனாய்
பண்பான மாமனாக!
அள்ளிக் கொஞ்சும் பேரனாக
அன்பான தாத்தாவாக
ஊர் போற்றும் உத்தமனாய்
காத்தவராயன் தொண்டனாக!
எளிமையாய் வாழ்ந்திருந்து
ஏற்றமுடன் மகிழ்ந்திருந்தாய்
காலம் எல்லாம் அன்பாலே
எமை காத்து வந்த எங்கள் ஐயா!
உனை போல வாழ்வதற்க
எல்லாரும் தவம் இருப்பர்
நீ எமக்கு கிடைத்த ஓர் வரம்
நீ இன்றி நகர்கிறதே
இந்த ஓர் ஆண்டு யுகம்!
காத்தவராயன் காலடியில்
ஓய்வெடுக்க நீ சென்றாய்
ஓர் ஆண்டு காலமிது
ஓய்வுக்காக நீ சென்றுவிட்டாய்!
உன் ஞாபகங்கள் எம் உயிர் காற்றில்
என்றும் நிறைந்திருக்கும்
உன் உணர்வாக என்றும் எம்மோடு
கலந்திருப்பாய்.. நீ ஆக நாம் இருப்போம்
வாழ்வை நிறைவாக்க!!!
ஓம் சாந்தி!!!