Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JAN 1931
இறப்பு 29 MAR 2023
அமரர் முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் (B A, Dip. In Edu)
ஓய்வுபெற்ற அதிபர், கல்வித்திணைக்கள அதிகாரி, சித்த வைத்திய நிபுணர்
வயது 92
அமரர் முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் 1931 - 2023 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.


அன்பை விதைத்த அப்பாவே
 அறுவடை செய்ய ஏன் மறந்தீர்கள்..
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
 பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தீர்கள்..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்
 ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
 கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா என்றழைக்க நீங்கள் எங்கள் அருகில் இல்லையே!
 இன்றும் எங்களை நிழல் போலத்
 தொடர்ந்து வரும் எங்கள் அப்பாவே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
 கண்ணீரை காணிக்கையாக்குகின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos