யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champs-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச்சிறைக்குள் புதைபட்டு வாழ்ந்த
அந்த வசந்த காலங்கள் தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து
பிரான்ஸ் நாட்டில் கூட நம்முடன் புலம் பெயர்ந்து
நம்மை அரவணைத்து பாதுகாத்த அந்தக்காலங்கள்
நம் மனதில் இன்பவலியாய்த் தைக்கின்றது.
எங்கோ பிரிந்து சென்றீர்களோ அப்பா?
நீங்கள் நம்மை அரவனைத்து வாழ்ந்தது போல்
உங்கள் பேரப்பிள்ளைகளைகளுக்கும்
அன்பைக்கொட்டி வளர்த்தீர்களே...
இவற்றை எல்லாம் தொடர்வீர்கள் என்று நினைத்து இருந்த
காலத்தில் நம்மை விட்டு சென்றதேனோ அப்பா...
உங்கள் மறைவின் துயரத்தில் இருந்து
மீள முடியால் தவிக்கும் அம்மாவுக்கு ஆறுதல்
சொல்லக்கூட நம்மால் முடியாமல் தவிக்கின்றோமே அப்பா!
நமது தந்தையின் மரணச்செய்தி கேட்டு நாம் துயரில் இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், நமது வீடுதேடி வந்து பல உதவிகள் செய்தும் மற்றும் செய்து கொண்டு இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நம் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவிர்த்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு சாந்திகள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இல்லத்திலும் 26-11-2022 சனிக்கிழமை அன்று 90 Rue Emile Zola, 93120 La Courneuve, France எனும் முகவரியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கும் வண்ணம் உங்களையும் குடும்ப சகிதம் வந்து கலந்து கொள்ளுமாறு அன்னாரின் குடும்ப சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.