யாழ். மாகியப்பிட்டிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அப்புத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் திவசக் கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
முகவரி:
மாகியப்பிட்டி சந்தி,
சண்டிலிப்பாய்,
யாழ்ப்பாணம்.