Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 SEP 1956
இறப்பு 09 MAY 2023
அமரர் முருகவேல்ராஜா நல்லையா
Charted Accountant - Former employee of KPMG and employee of Canada Revenue Agency
வயது 66
அமரர் முருகவேல்ராஜா நல்லையா 1956 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகவேல்ராஜா நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:28/04/2024

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஆண்டு ஒன்றாகியும்
அனல் கக்கி எரியுதையா

எங்கள் உடன்பிறப்பே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம்!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்