நன்றி நவிலல்
பிறப்பு 03 SEP 1932
இறப்பு 28 AUG 2021
திரு முருகன் வடிவேலன்
ஓய்வுபெற்ற அதிபர் நடேஸ்வரக் கல்லூரி குட்டியப்புலம் வித்தியாலயம்
வயது 88
திரு முருகன் வடிவேலன் 1932 - 2021 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் வடிவேலன் அவர்களின் நன்றி நவிலல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

நீங்கள் மறைந்து 31 நாட்கள் ஆகின்றன, ஆசை அப்பா!
எங்களால் உங்கள் பிரிவை மறக்க முடியவில்லை
நீங்கள் எங்களுடன் கழித்த காலங்கள் எல்லாம்
எங்களுக்கு இறைவன் கொடுத்த பொற்காலம்
போல் உணர்கின்றோம், ஆசை அப்பா!
உங்கள் சொந்தங்கள் மாத்திரம் அன்றி
எல்லோரையும் உங்கள் பிள்ளைகள் போல்
மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்து
ஆறுதல் மொழி கூறி மகிழ்வீர்கள்,
எப்பொழுதும் உங்கள் நினைவுகள் நீங்காது
துடிக்கின்றன, ஆசை அப்பா!

எங்கள் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்பிக்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

இப்படிக்கு
கதிரவேலு(தம்பி)

எமது குடும்பத்திற்கு கலங்கரை
விளக்காய் நின்று ஒளிவீசி
வழிகாட்டி உறுதுணையாய் இருந்தீர்கள்
உங்களோடு நாங்கள் வாழ்ந்த
பொழுதுகள் என்றும் எம்மால் மறக்கமுடியாதவை
உங்களுக்கென வாழாது எங்களுக்காய்
வாழ்ந்த உத்தமர் நீங்கள்
உங்கள் வாழ்வு அமைதியான நீரோடை
எதற்கும் நீங்கள் அவசரப்பட்டதில்லை
பதட்டம் கொண்டதில்லை
அழகான புன்சிரிப்பு என்றும்
உங்கள் முகத்தை அலங்கரிக்கும்
அன்புடன் எம்மை அழைக்கும் போது
எங்கள் தேகம் புல்லரிக்கும்
உங்கள் சொந்தங்களான எம்மை தந்தையாய்
தாங்கி நின்று உலகில் தலைநிமிர வைத்தீர்கள்
துணையிழந்து தனிமரமாய் நின்றும்
கலங்கவில்லை நீங்கள்
எங்களை அரவணைத்து எம் வாழ்வை
வளப்படுத்தி அதில் மகிழ்வு கண்டீர்கள்
எங்கள் உயர்வுக்காய் எங்கள் மகிழ்வுக்காய்
உங்கள் நிறைவுக் காலத்தை அர்ப்பணித்தீர்கள்
இன்று நீங்கள் எம் அருகில் இல்லை ஆனால்
எம் அகத்தில் என்றும் நீக்கமற நிறைந்துள்ளீர்கள்
உங்களின் அன்பான ஆத்மா சாந்தி அடைய
இறைவனை இறைஞ்சுகின்றோம்
உங்கள் பாசமுள்ள,

பெறாமகன்மார்: கந்தையா நவரத்தினம், கந்தையா குணரத்தினம்

பெறாமகன்மார்: பத்மநாதன் தங்கரத்தினம்(சந்திரா), சிவராசா செல்வரத்தினம்(பூங்கிளி)

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.