

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மூத்ததம்பி செல்லமுத்து அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.
”எங்களுக்காக வாழ்ந்து
எங்களை வாழ வைத்த
தெய்வமே! தான் பட்ட
கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது”
எனக்கருதி உங்கள் வாழ்நாள்
முழுவதையும் குடும்பத்திற்காகவும்
எமது முன்னேற்றத்திற்காகவும்
அர்ப்பணித்தவரே!
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து இருபத்தி ஏழு
ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
ஆண்டுகள் ஓடிவிடும் மாண்டவர்
மீள்வதில்லை ஆனாலும்
எம்மை இடர் நீக்கி வாழ
வைத்த உங்கள் நினைவு
சுடராய் எம் மனதில் ஒளிர்ந்து
நிற்கும் உயிரூட்டி வளர்த்தீர்கள்
எங்கள் உள்ளத்தில் உயிர்
உள்ளவரை வாழ்வீர்கள்!
வையத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்தீர்கள் என்றும் வானுறையும்
தெய்வத்துள் அமைதி பெறுக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
சரவணை தேவபுரம் கதிர்வேலவனின்
பாதரவிந்தங்களை அனுதினமும் பிரார்த்திக்கின்றோம்...