யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட M F C கியுபேட் அவர்களின் நன்றி நவிலல்.
யாழ். ஊர்காவற்துறையைச் சேர்ந்த எமது தந்தை M.F.C. கியுபேட் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில் நேரில் மற்றும் தொலைபேசி மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் மூலமாக ஆறுதல் கூறியவர்களுக்கும், எமது தந்தையின் நல்லடக்க வழிபாட்டில் பங்கேற்றோர் மற்றும் பல்வேறு நாடுகளிலுமிருந்து எம்மோடு செபத்தில் ஒன்றிணைந்து அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்தவர்களுக்கும், நாம் நேரில் காவலூர் வந்தபோது எம்மை அன்போடு உபசரித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், எமது தந்தையின் இறுதிச்சடங்கின்போது எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
May his souls rest in peace 🕊