யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த M F C கியுபேட் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்”
- ஆதி.11:25
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது
உங்கள் நினைவு!!
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப் போனது
இன்னமும்
நம்பவே முடியாமல்
நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம்
கண்ணீரில்
ஆண்டுகள்
பல சென்றாலும்
நீங்காது
உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
May his souls rest in peace 🕊