2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்
இறப்பு - 14 JUN 2019
அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர் 2019 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கனடா ஆகிய வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி யோசெப்பின் அமிர்தநாதர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

 நேர்மைக்கு நேர்மையாய் நடந்து
அன்பிந்கு அகராதியாய் இருந்து
பண்பிற்கு ஆசானாய் இருந்து
எமக்கு வழிகாட்டியாய் திகழ்ந்து
இவ் உலகில் எம்மை நன்மக்களாய்
ஆக்கிய எங்கள் அம்மா
ஏங்கே சென்றீர்கள் எமைவிட்டு.

ஊமைகளாய் எமதுள்ளம்
ஊங்களன்புக்கு ஏங்குதம்மா
மனம் எங்கி தவிக்கின்றது அம்மா
உங்களை காண உங்கள் குரல் கேட்க
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
உறக்கத்தை தேடி ஒடுகின்றோம்
கனவில் உங்கள் வதனம் காண்பதற்கு
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கெண்டே இருக்கும்.

அடும் விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் வதனம் காண

நித்தம் உங்கள் நினைவுகளோடு
உங்கள் பாதம் பணிகின்றோம் அம்மா
அன்னையே உங்கள் ஆன்மா
அருள் பெறட்டும் ஆண்டவர் மடியில்
தங்களளின் பிரிவால் துயருறும்
அன்பு சகோதரி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை .

எங்கள் தாயின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபமாலை தாசர்சபை மிருசுவில் யாழ்ப்பாணம் புனித லூர்து அன்னை ஆலயம் கன்னாட்டி மன்னார் புனித பத்திரிசியார் ஆலயம் மேர்ளீன் ஒன்றறியே கனடா ஆசிய இடங்களில் 14-06-2021 திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்