
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்..!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்
27/04/2025 அன்று அன்னாரது Tottenham இல்லத்தில் நடைபெறயுள்ளது.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அழைக்கின்றொம்.