1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேனகை தனபாலசூரியர்
(ஆச்சி)
வயது 86
Tribute
29
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை, லண்டன் Charlton Southall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேனகை தனபாலசூரியர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே தாயே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளிக்கூடத் துவழாமல் தூக்கிவிட்ட தாயே!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உங்கள் பிள்ளைகளாக
பிறக்க வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I will miss You dearly, the kind of friendship we had I will never forget. Thanks for everything And prayers are with you ??