யாழ். இமையானன் கிழக்கு கேணியடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மெய்யழகன் ஜெனன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இளவயதில் எமை விட்டுப் பிரிந்தீரே..
வாழவேண்டிய காலத்தில் உன் வாழ்க்கை பயணம் முடிந்ததே..
நீ காட்டிய அன்பும், பாசமும் மறக்கமுடியவில்லை நம்மால்..
உன் நினைவுகள் என்றும் நம்மோடு
ஒளிர்ந்திருக்கும் அகல்விளக்கு போல.
.
காலங்கள் கடந்தாலும் உன் இழப்பு
ஈடு செய்ய முடியாத ஒன்று
கண்முன்னே நீ வாழ்ந்த நாட்கள்
நினைவலைகளாய் வந்து வந்து போகின்றன..
உன் பிரிவை எண்ணி எண்ணி நம் மனம் துடிக்கின்றது..
மாதம் ஒன்று கடந்தாலும்
உன் வலி சுமந்த நினைவுகள் இன்னும் மாறவில்லை..!
நீ இல்லாத வெற்றிடத்தை எவராலும் நிரப்பிட முடியாது..!
எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடியில்
அமைதியாக இளைப்பாறிக்கொள்..!
நாம் வாழும் காலம் வரை
நம் நினைவுகளோடு நீ வாழ்ந்திருப்பாய்…!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
பின்னர் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிமுதல் பி.ப 5:30 மணிவரை St Raphael's Catholic Church, St Raphael's House, Morrison Road,
Hayes, Middlesex, UB4 9jP எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அந்நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
St Raphael's Catholic Church,
St Raphael's House,
Morrison Road, Hayes,
Middlesex, UB4 9jP