Clicky

மரண அறிவித்தல்
அமரர் மீனாட்சி லோகநாதன்
இறப்பு - 24 FEB 2021
அமரர் மீனாட்சி லோகநாதன் 2021 எட்டியாந்தோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

எட்டியாந்தோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சி லோகநாதன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவதேவர் பேச்சியம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி, மாலதி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஆதிமூலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜெயகாந்தன், சகாதேவன்(உதயா), ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வேந்திரன்(கனடா), மகேந்திரன், நிரஞ்சனா(கனடா), செந்தூரன், நளினா, அரவிந்தன், கீர்த்தனா, கார்த்திகேயன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

றஜனிகாந்த்(கனடா), கிருஷாந்தி(கனடா), துஷியந்தன், விவேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷ்வின், ப்றஜன், யுகிஷன், அஜய், அஜீஷா, வித்யுத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி தொடக்கம் பி.ப 01:00 மணி வரை Mahinda Funerals Wattala இல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்