
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கிளிநொச்சி, கொழும்பு ஆகியோரின் இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை ரகுபதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், Dr குணரட்ணம் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற உருத்திரபசுபதி, கமலாதேவி தம்பதிகளின் மருமகளும்,
ரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
சாம்பவி, வைஷ்ணவி, தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஆனந்த் அவர்களின் அன்புச் சகோதரியும்,
Oscar அவர்களின் அன்பு மாமியாரும், நிலா, ஈசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கலாபதி, உமாபதி, அனுசூயா, அகல்யா, கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்படும், 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Our Deepest condolences for your loss, Rest in peace.