யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயூரி ஜனகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறை சுமையோடும்
கடவுளாய் பிறர் உயிர் காத்த உத்தமியே!
கனவுகள் ஆயிரம் கண்களில் சுமந்து
கஷ்டங்கள் பல கண்டும் கலங்கிடாமல்- நீ
கடமையில் கண்ணாயிருந்தாய்
கடைசியில் எம்மை கலங்க விட்டுச் சென்றதென்ன
ஆண்டு ஓன்று ஆனதம்மா
கையில் குழந்தையோடு வருவாய் என
காத்திருந்த அன்னையை ஏமாற்றிச் சென்றதெங்கே
பால் வாசம் அறியாத பாலகனாய்
பாரிலே எனை தவிக்கவிட்டு போனதேனம்மா?
பாலூட்டி தாலாட்டும் பாக்கிய மெனக்கு
கிடைக்காது போனது ஏனம்மா?
உதிரத்தால் உயிர் கொடுத்து
ஊண் உறக்கமின்றி
உறவொன்று மலர்ந்திட காத்திருந்த- நீ
நான் விழி திறந்த போது
நீ விழி மூடியது ஏனம்மா?
பல உறவு இங்கிருந்தும்- அவை
உன் அன்புக்கு ஈடாகுமோ!
தினமும் தீயில் வேகுதம்மா உனைச் சுமந்த கருவறை
நித்தமும் பெற்றவள் கலங்கித் துடிக்கிறாள்
துள்ளல் நடையோடு கதை பேசும் உன் கண்களைத் தேடுகின்றோம்
இம் மண்ணில் மீண்டும் வந்து புன்னகைப்பாய்?
என்றும் ஆறாத்துயரில்
குடும்பத்தினர்