Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1986
இறப்பு 04 NOV 2020
அமரர் Dr. மயூரி ஜனகன்
De Soysa மகப்பேற்று மருத்துவமனை, கொழும்பு
வயது 34
அமரர் Dr. மயூரி ஜனகன் 1986 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 76 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரி ஜனகன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவேந்திரன் யோகலட்சுமி(யோக) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், பாலேந்திரன்(இளைப்பாறிய அதிபர்- சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்) பேரின்பஜானகி(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்- யாழ் கல்வி வலயம்) தம்பதிகளின் அன்பு மருமகளும், 

ஜனகன்(கண்ணா- Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷாலினி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

யோகலிங்கம்(ஜேர்மனி), தவலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(திருகோணமலை), ஞானலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சாந்தலட்சுமி(வேலணை), ஞானலட்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயலட்சுமி(கனடா), மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

திருப்பரன்(லண்டன்), துவாரகா(Dr. தேசிய வைத்தியசாலை- கொழும்பு), கல்பனா(ஆசிரியை- அரியாலை பார்வதி வித்தியாலயம்), பிரதீபா(Lawyer), நிரூஜன்(HSBC- China), நிரூஜா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனிஷ், அஜேஸ், அக்‌ஷிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சாயிரமணா(யாழ்ப்பாணம்), இல்டசியன், நிலானி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜனகன்(கண்ணா- கணவர்)