Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 MAY 1948
இறப்பு 22 NOV 2024
திரு மயூரவரதன் மயில்வாகனம்
வயது 76
திரு மயூரவரதன் மயில்வாகனம் 1948 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரித்தானியா லண்டன் Wembley, Norfolk King's Lynn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயூரவரதன் மயில்வாகனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள்  31 கடந்தாலும்
ஆறிடும் உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு
இல்லைஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி, சபிண்டீகரண நிகழ்வும் 28-12-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Kingsbury Green Primary School,Old Kenton Lane, London, NW9 9ND (Main hall) எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.