Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUL 1944
இறப்பு 12 JUL 2022
அமரர் மயில்வாகனம் வினாசித்தம்பி
முன்னாள் உரிமையாளர் குகன் ஸ்ரோஸ் - பளை
வயது 78
அமரர் மயில்வாகனம் வினாசித்தம்பி 1944 - 2022 அல்லிப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வினாசித்தம்பி அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானை(மாது) அவர்களின் அன்புக் கணவரும்,

குசேலா(லண்டன்), குகதாஸ்(இந்தியா), பிரேமதாஸ்(லண்டன்), கோகிலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரத்தினம்(லண்டன்), லதா(இந்தியா), டயாதேவி(லண்டன்), காந்தரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளமாறன் - ஜனனீதா(லண்டன்), இந்துஜா - சுஜாகன்(லண்டன்), கஸ்தூரி - பிரகாஷன்(நெதர்லாந்து), மகிழ்ராஜ்(இந்தியா), பிரதுஜா(லண்டன்), பிரதோஸ்(லண்டன்), பிருத்திகா(லண்டன்), நிதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அபிநயா(லண்டன்), அஞ்சலிக்கா(லண்டன்), ஆரியன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, குஞ்சுப்பிள்ளை, தம்பிராசா(துரை), தம்பித்துரை, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் யோகம்மா, பூரணம், பாக்கியம், தனலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற பீற்றர் பெனடிற், தனலக்ஸ்மி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லக்ஸ்மி தம்பதிகள், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், செல்வராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

மனோகரசிங்கம்(கனடா), நிமலமோகன்(சுவிஸ்), பத்மராணி, நிமலரங்கன், நிமலரூபன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

கமலாதேவி, சரோஜாதேவி, சரஸ்வதி, பொன்னுத்துரை, யோகலிங்கம்(கனடா), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, புஸ்பமலர், நடராஜா மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), உதயகுமார்(கனடா), தயா(இலங்கை), கண்ணன்(இலங்கை), கோமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2022 புதன்கிழமை அன்று புலோப்பளை பளையில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உழவுக்கு வந்தனம் தந்த
உயிரொன்றுறங்கியதோ?
நிலமெல்லாம் நிலவாக
நினைத்தபடி முதலாளியாய்
வளமான விவசாயம் வழங்கிட்ட
வள்ளலாம் வினாசித்தம்பியவர் வாழ்ந்த விடம்
விட்டகன்று வானுலகம் எய்தியதேன்?

அன்னமே அடிவயிற்றின் சின்னமென
அரிசிதனை மூலப் பொருளாக்கி
அளந்ததனைச் சந்தையிலே விற்றதனால்
பொன்மகனார்க்குப் பறித்த பெயர்
அரிசிக்கார வினாசித்தம்பியன்றோ!

அறத்தியம்மன் பொங்கலிலே
அன்னதானம் செய்வதிலும்
அடியவரின் பங்குண்டு
அகிலம் விட்டகல அறத்தியம்மன் விழித்து நிற்க
அன்னம் உண்ட மக்கள் கூட்டம்
அலறி ஓசை எழுப்பி நிற்க
மண்ணுலக வாழ்வு விட்டு
மறைந்தோடி மாயமென்ன?

முழு நிலவாய் ஓர் மகளும்
முத்தாய் மூன்று மணிகளும்
முழுமை வாழ்வில் மூழ்கிடவே

செழுமை நாடாம் இங்கிலாந்தில்
செழிப்புறு வாழ்வில் மகளுடன ஈர் புத்திரர்
இல்லறவாழ்வுடன் இன்புற
வல்லவன் வகுத்த மூத்த மகனார்
இரண்டாவது பிள்ளையாய் வாழ்வியல்
தன்னை உயிர் மொழி தமிழை உரைத்திடும்
தென்னாடுடையவன் திருப்பாதம் கண்ட
நன்நாடாம் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழ வைத்தே
மகிழ்வுடன் வாழ வழி செய்த பின்னே
மண்ணுல வாழ்வு காணும்
என்றோ குடிவாழ் வீடகன்று ஊரகன்று
உலகன்று விண்வாழ் குலதெய்வப் பாதம் சென்றீரோ?
காணிக்கை கண்ணீரான் ஆக்கியதுமேனோ?

இங்ஙனம் உறவுகள்

Live Streaming Link: Click Here

தகவல்: றோகன் மனோகரசிங்கம்(பேரன்)

தொடர்புகளுக்கு

குகதாஸ் - மகன்
குணரத்தினம் - மருமகன்
பிரேமதாஸ் - மகன்
கோகிலதாஸ் - மகன்
ரங்கன் - பெறாமகன்
றோகன் மனோகரசிங்கம் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices