Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1956
இறப்பு 14 JUN 2024
திரு மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ்
வயது 68
திரு மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் 1956 - 2024 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம், மங்கையர்கரசி(சிரிமா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி(விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குணரெத்தினம்(பிரான்ஸ்), சிவலிங்கதாஸ்(சிங்கன்- சுவிஸ்), அரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதினி(குஞ்சு), மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற லீலாவதி மற்றும் செல்வராணி, காலஞ்சென்ற செளந்தரராசா மற்றும் யோகராணி, புலேந்திரராசா, ஜெயந்திரராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிகரன் மற்றும் வினோதப்பிரியா(பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிகா(பிரான்ஸ்), கோகுலரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரக்யா, பிரியன், சஷ்டிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-06-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திவாகரன் - மகன்
ரமணன் - மருமகன்
விஜயகுமாரி(விஜயா) - மனைவி