யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா, உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் பேரின்பம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட
தூரம் சென்றீர்களோ அம்மா!
ஆண்டொன்று வரும்போதும்
ஓயவில்லை உங்கள் நினைவலைகள்
அன்பான மலர் முகமும் அழகான
முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை
எம் நினைவில்
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
முதுமையில் ஒரு மழலையை கண்டோம்
உங்களிடம் அந்த
மழலை மொழி
கேட்காது தவிக்கிறோம் நாமிங்கு!
எங்களின் கடைசி நாள் வரைக்கும்
உங்கள்
இனிய முகத்தை நினைத்திருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓராண்டு நினைவு நாள் எதிர்வரும் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல. 91, D10,
உருத்திரபுரம்,
யாழ்ப்பாணம்.