யாழ். பெரிய அரசடி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மில் வீதி, மீசாலை கிழக்கு, மீசாலை, கனடா Ottawa, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயிலுப்பிள்ளை புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-12-2025
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே தாயே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளிக்கூடத் துவழாமல் தூக்கிவிட்ட தாயே!
எங்கள் மாமியே- நீங்கள்
எம்மைவிட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதோ!
பேரப்பிள்ளைகள் நாம் இங்கு
நீங்களின்றி தவிக்கின்றோம்!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உங்கள் பிள்ளைகளாக, மருமக்களாக,
பேரப்பிள்ளைகளாக நாங்கள்
இருக்க வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Our Deepest sympathies to your Family at this difficult time.