கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிகரன் ஆறுமுகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்தாலும்
உனது நினைவு நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி மாறாத நினைவுகளில்
நாமும் வாழ்கின்றோம்..
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்..
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில் அழியாமல் நீ இருப்பாய்....
உள்ளம் வெந்து துடித்து
உரக்கக் கத்துகிறோம்...
உத்தமனே உன் பிரிவு
உயிருள்ளவரை உறங்காதய்யா...
மண்ணுலகிற்கு நீ பிறந்தது...
மாபெரும் புண்ணியமாய்...
எண்ணிய எம் நெஞ்சமெல்லாம்..
கண்ணிமைக்கும் நேரத்தில்..
கண்ணூறாய் போனதென்ன..?
அன்பாக நீ பேசிய வார்த்தைகளெல்லாம்..
காற்றோடு கலைந்து கற்பூரமாகியதே..
பண்போடு நீ வளர்ந்ததனால்..
பாதியிலே வாழ்க்கை பரிதவித்துப் போனதுவோ..
திரும்பிய பக்கமெல்லாம்..
உன் திருவுருவம் கண்ணுக்குள் நிறைக்குதய்யா..
செல்லக் கோபம் கொள்ளும் உன் அழகெல்லாம்..
சொல்லாமல் போனதய்யா...
கதறியழுதாலும் உன்னைப்போலொரு செல்வன்...
இந்த உலகம் காணாதய்யா...
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்....
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Selvi and Suren family from UK.