கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிகரன் ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
ஓராண்டு சென்றது!
மறைந்த
உன் நினைவு மட்டும்
நெஞ்சில்
மாறாமல் உள்ளது மகனே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென
எரிமலையென
கடலலையென
எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக்
கொண்டே
இருக்கும்
வாழ்ந்தபோது வானத்தைத் தொட்டவன் நீ
சாதனைகள் பல செய்ய வேண்டும் என்று
இலட்சியம் கொண்டவன் நீ
அதை எல்லாம் செய்யாமல் ஏன்
சென்று மறைந்தாய்?
நூறாண்டு போனாலும்
உன்
நிலவு முகம் தேயாதடா
உன்
நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை வற்றிப் போகாது...
ஆண்டு தான் ஒன்று
ஆனதுவோ
உன் நினைவுகள் எம்
நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை..!
பாசம் என்னும் பிணைப்பிலே
இணைந்திருந்த எம்மைவிட்டு
எங்குதான் சென்றாயோ
உன் சிரித்த
முகமும்
சிந்தனையான பேச்சும்
எம்
நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
குடும்பம்
மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய்..?
காத்திருக்கின்றோம் விழிகளில்
நீர்வடிய வருவாயா எமைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!
தொடரும் விம்பங்கள்: அன்னாரின் வாழ்க்கையில் ஒருநாள். ஒரு ஆவணப்படம்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Selvi and Suren family from UK.