Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 MAY 1935
இறப்பு 15 NOV 2021
அமரர் மேரி றீற்றா பாலேந்திரா
இளைப்பாறிய ஆசிரியை
வயது 86
அமரர் மேரி றீற்றா பாலேந்திரா 1935 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி றீற்றா பாலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நான்கு மணிகளை பெற்று வளர்த்து
அன்பாலே அரவணைத்த அன்னை நீர்
கண்ணுறக்கம் கொள்ளாமல் எமைக் காத்தீர்
கல்வியில் நாம் உயர எமக்கும் ஆசானானீர்
கைம்பெண்ணாய் தனியாக எமைக் கரை சேர்த்தீர்
அகிலம் விட்டுப் போனீர் உள்ளம் துடிக்கிறது
இவ்வுலகில் நாம் பட்ட கடன் எவ்வுலகில் அடைப்போமோ?

எமது தாயாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31 ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 15.12.2021 புதன்கிழமை அன்று 90/7 பொற்பதி றோட், கொக்குவிலில் நடைபெறும்.

இங்ஙனம்,

பிள்ளைகள்: றஞ்சினி, றமேஸ், ராஜன், றூபன்

மருமக்கள்: அன்ரன், விஜி, ஜெனற், பாமா

பேரப்பிள்ளைகள்: நிரூஜன், ஸ்ரெபனி, றெமோ, றெகான், டியோன்

தங்கை: மேரி மாகிறற் அலிஸ்

பெறாமக்கள்: ஜோ, ஜொய்சி, யூட், யூட்சி, ஜொய்லின், மகில், யது, லாவண்யா, சுகந்தன்

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சினி - மகள்
றூபன் - மகன்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.