யாழ். நாரந்தனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி றீற்றா பாலேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று மெல்ல
நகர்ந்தது
ஆறாது உம் நினைவுகள்
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு
சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில்
வாடிக் கிடக்கின்றோம்
எம்
இமையோரம் வழியும்
கண்ணீர்த் துளிகள்
எமக்குள்
ஏக்கங்களாய் வலிக்கின்றது
நேசம் மரிக்கவில்லை
நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து
அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி
மடிகின்றோம் அம்மா!
பிரிவென்ற காலம் ஓடிச்சென்று
ஆண்டுகள் ஆனாலும்
உங்கள்
எண்ணங்கள் தியாகங்கள் எம்மனக்
கூண்டுக்குள் நிலையாய் உறைந்திட
தொடரும்
கண்ணீர்க் கோலங்கள்!
அன்புத் தாயே நீங்கள் எம்மைவிட்டு
பிரிந்தாலும்
எம் உயிர் உள்ளவரை
உங்கள் ஆத்மார்த்தமான
வழிகாட்டல்
தொடரட்டும் எம்மிடையே!!!
என்றும் உங்கள் நினைவுடன்
வாழும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், தங்கை, பெறாமக்கள்.
Sorry rooban Nan ippathan ungal ammavin maraivu arinden ,kavalai than analum athuvum iyatkai ellorikkum orunal kattayam athu varum manathai Innu m thairiyappaduthikollungal