யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி லில்லி மரியநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள் அம்மா…
இன்று உங்கள் மடி இல்லை,
ஆனால் உங்கள் தியாகம்
என் வாழ்வின் ஒளியாக உள்ளது…
உடல் இல்லை என்றாலும்,
நினைவாக இன்னும்
என்னைத் தழுவுகிறீர்கள் அம்மா…
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்....
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், குடும்பத்தினர்
My heartfelt condolences to Carolin May her soul rest in heaven