யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசபின் அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா நீ எங்கே அம்மா?
எம்மை விட்டுப் பிரிந்து - இன்று
ஆண்டு ஒன்று ஆனதா? அம்மா!
இன்னும் நீ இல்லை என்பதையே
ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் - இன்று
ஆண்டு ஒன்றின் நினைவஞ்சலியா? அம்மா!
நான் உன்னை நினைப்பதில்லை அம்மா
நினைத்தால்..............
நீ இந்த உலகில் இல்லையென்பதும்,
இனி எப்போது உன்னை பார்க்கமுடியும்?
என்பதுமான............
நினைவலைகளில் சிக்கித்தவிக்கின்றேன் அம்மா
உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும்
இறப்பு நிச்சியம் என்ற நியதியெல்லாம்
உன் இறப்பில் ஏற்றுக்கொள்ளமுடியாமல்
தவிக்கின்றோமே அம்மா
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள் வரைக்கும் - உன்
கடமையை திறம்பட செய்தாயே அம்மா
எங்களுக்கான எல்லாவற்றையும் செய்தாயே அம்மா
எல்லாமுமாக இருந்தாயே அம்மா
நல்ல கல்வி, ஆரோக்கியம் தந்தாய் - எம்
விருப்பங்களுக்கு பக்கபலமாக நின்றாய் - நீ
கடமையை ஒருபோது தவறியத்தில்லையே அம்மா
எப்படி எம்மைவிட்டுப் பிரிந்தாய் அம்மா
உன் ஆன்மா நித்திய இளைப்பாருதலில்
இறைவனோடு நிலைத்திருக்கட்டும்
லதா லண்டன்