Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 SEP 1938
இறப்பு 10 JUN 2022
அமரர் மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர்
வயது 83
அமரர் மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர் 1938 - 2022 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி இமக்குலேற் சில்வெஸ்ரர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 ஆண்டு ஒன்று ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
 நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும் அம்மா.

பொன்னோடு பொருள் சேர்த்து
பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
அம்மாவின் நிழலின் கீழ்
வாழ்கின்ற வரம் வருமோ!!!

உம் உதிரத்தால் எமக்குள்
உம்மை சுமக்கின்றோம்
 உடலை பிரிந்தோமே தவிர
உம்மையல்ல

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
 அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
 உங்கள் முகம் காண..... "

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos