2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மருதமுத்து வீரமுத்து
(முத்து)
வயது 74
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
களுத்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். குரும்பசிட்டி, கொழும்பு, சவுதி அரேபியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Cornwall Plymouth ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதமுத்து வீரமுத்து அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!
எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்!
அன்பான எங்கள் அன்பு அப்பா!
இறைவனிடம் நீங்கள் சென்று
ஈராண்டுகள் ஆகியதுவோ...
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்