யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டுதான் இருக்கின்றது அம்மா
எங்களுக்குத் துணையாய் எங்களைத் தாங்கும் தூணாய்
எங்களோடு நடைப்பயணம் நடத்துவீர்கள் என்று
நாம் எல்லாம் நம்பியே இருந்தோம் அம்மா
ஆனால் எந்தவித அறிகுறிகள் இல்லாமல்
அம்மா உன்னை சாவுக்கு அழைத்தது யாரோ
அம்மா உங்கள் பாசம்
உருகாத உறவுகளையும் உருக வைக்கும்
சொரியாத கண்களையும் கண்ணீர் சொரிய வைக்கும்
நீங்கள் எங்களை விட்டு சென்றது ஏன் அம்மா
கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே அம்மா
உன்னைப்போல் பாசம் காட்டும் உன் முகத்தை
நாங்கள் யாரிடமும் இன்னும் அறியலையே
அம்மா உன் மகனை அழைத்து இன்றுடன்
ஆறு மாதங்கள் ஆகின்றன அம்மா
உன் மகனை அழைத்தது ஏனோ நாங்கள்
இருவரையும் இழந்து இங்கு தவிக்கிறோம்
உன்னைப் போன்ற சகோதரத்தை
இனி எப்போது நாம் பார்ப்போம்
எம் உள்ளம் அண்ணா, தம்பி என்று
அழுகின்றது எம் கண்கள்
நீ இல்லா உலகை எண்ணி
உங்கள் பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
உங்கள் துயரில் நானும் இணைகிறேன்.தவம்