யாழ். கரவெட்டி யாக்கரு கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரெட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புத் தந்தையே!
மாதம் ஒன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!
பூந்தோட்டத்தில் நல் மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.