நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை பிரான்சிஸ் இராசேந்திரம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 11 ஆனாலும்
எங்களை விட்டு அகலாது
உங்கள்
நினைவுகள் அப்பா
நினைவுகள்
வரும்போத
நிலைகுலைந்து
போகின்றோம்
அப்பா உங்களை
நினைக்காத
நொடிகலில்லை அப்பா
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள்
முகம் இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப்
பார்க்க மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Rest in peace