10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 JUN 1929
கர்த்தருக்குள் 05 DEC 2011
அமரர் மரியாம்பிள்ளை பிரான்சிஸ் இராசேந்திரம்
வயது 82
அமரர் மரியாம்பிள்ளை பிரான்சிஸ் இராசேந்திரம் 1929 - 2011 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை பிரான்சிஸ் இராசேந்திரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

தீவகத்தின் திருவிளக்காய் திகழ்ந்திட்டார் எங்களப்பா
காவலூர் மதிக்கவே கண்ணியமாய் அவரிருந்தார்
அந்தோனியார் கல்லூரி அளித்திட்ட அறிவாலே
அனைவருமே விரும்பும் ஆளுமையாய் அவருயர்ந்தார்

ஊற்றெடுத்த பாசமதால் ஒருங்கிணைத்தார் பிள்ளைகளை
ஊட்டிவிட்ட பின்னால்த்தான் உண்டிடுவார் எங்களப்பா
மாட்டிவிடும் நாட்காட்டி மனப்பதிவைக் காட்டிவிடும்
வாட்டமில்லா உடலோடு வாழ்ந்திருந்தார் எங்களப்பா

வாஞ்சையுடன் நட்புதனை வழங்கிநின்றார் எங்களப்பா
கருணையுடன் காரியங்கள் ஆற்றியே நின்றிடுவார்
தனக்கென எதுவும் செய்யாமல் நமக்கே எல்லாம்
செய்தவர் தான் எமது அப்பா, மாமா, பப்பா

நாட்குறிப்பை எழுதுவதில் நாட்டமுடன் அவரிருந்தார்
நானிலத்தில் நித்தியமாய் வாழ்ந்திடுவார் எனநினைத்தோம்
காலனவன் நாட்குறிப்பில் கண்டுண்டார் எங்களப்பா
கண்ணீரில் மிதக்கவிட்டு காலனவன் அழைத்துவிட்டான்

ஏங்கித் தவிக்கின்றோம் எங்களப்பா காணவில்லை
இருந்தவிடம் நடந்தவிடம் எங்குமே காணவில்லை
அவர்பிடித்த படம்பார்த்து அழுகின்றோம் அனைவருமே
அவர்பிரிவை மனமெண்ண அழுகையே பெருகிறது 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices