யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராயப்பு மரியகொறற்றா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு
வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
வருடங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
எம் அன்னையின் நினைவுத் திருப்பலி 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித பற்றிமா தமிழ் அன்னை ஆன்மீக பணியகத்தில்(7411 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada) நடைபெறும் ஞாயிறு பி.ப 04:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு எம் தாயின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஜெபிக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம்.