Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 OCT 1961
இறப்பு 06 JUL 2013
அமரர் இராயப்பு மரியகொறற்றா (மணி)
வயது 51
அமரர் இராயப்பு மரியகொறற்றா 1961 - 2013 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராயப்பு மரியகொறற்றா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
 எமை அன்போடு வளர்த்தவளே

 உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
 அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே

பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
 பல காத்து பத்திரமாய் எமைப் பெற்றெடுத்தவளே
 ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே

 இவ்வுலகில் 
ஆண்டுகள் எட்டு கடந்திடினும்
உன் நினைவது எமை விட்டு அகலாமல்
என்றும் உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....

தகவல்: அன்பு மகன் நிசான்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute