11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளான் தோலகட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி அருள்மணி ஜோசப் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறக்க முயன்றாலும் மறக்க விடாத நினைவுகளாய்,
இறையோடு சென்று இன்று பதினோறு ஆண்டுகள்
வார்த்தைகளுக்கு எட்டாத வலிகள் உங்கள் இழப்பு!
வாழ்ந்தபோதே வழிகாட்டிய விளக்கே
மறைந்தாலும் எங்கள் மனங்களில்
மாய்வதில்லை உங்கள் ஒளி!
ஆண்டுகள் பதினோன்று கடந்தாலும்
ஆழமான அன்பின் வேர்கள் அறுபடவில்லை
நீங்கள் எங்களுக்கு வாழ்வின் இலக்கணம்,
நெஞ்சின் நிலையான நட்சத்திரம்.
திரும்பாத நேரத்தை உங்கள் நினைவுகளிலும்
நினைவுப் படங்களிலும் தேடி நிற்கின்றோம்
ஒவ்வொரு நாளும் உங்களை உணர்கின்றோம்,
என்றென்றும் உங்களை மறக்கமாட்டோம்.
தகவல்:
எட்மன் ஜேசுதாஸ் குடும்பத்தினர்