10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வசாவிளான் தோலகட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி அருள்மணி ஜோசப் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்..!
தகவல்:
எட்மன் ஜேசுதாஸ் குடும்பத்தினர்