

யாழ். காவலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஸ்டெல்லா ஜோசப் ராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவா என்னைக்காத்தருளும். உம்மிடம் நான்
அடைக்கலம் புகுந்துள்ளேன்
திருப்பாடல்- 16:1
இறைவன் மண்ணுலகிற்கு வந்து ஒவ்வோரு வீட்டிலும்
தங்கி வாழ நினைத்தார் எனவே தாயைப்படைத்தார்.
வையகம் போற்ற வாழ்ந்து
பழுதில்லாப் புதுமலராய்- என்றும் எம் இதயங்களில்
அக்காவாக, மைத்துனியாக, அம்மாவாக, மாமியாக,
கண்ணாடி அம்மாச்சியாக, அப்பாச்சியாக,
அம்மம்மாவாக, பூட்டியுமாக மணம் வீசும் அன்பு மலரே
ஆண்டுகள் பத்து கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள், அகலவில்லை
உங்களின் அன்பு முகம்.
உயர் குணமேவிய திருவுருவாய் வழிகாட்டி
நிலவொளியாய் குளிர்மை தந்து-தினம்
எமையெல்லாம் மனதாற்றி
அகவொளியாய் நிறைமதியாய்
குறை நிறைகளை எடுத்தியம்பி
நல்வழி காட்டிய உம் கருணையினை
பேறாகப் பெற்றோம், பெருமை கொண்டோம்.
உங்கள் புன்சிரிப்பும், பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும் ஏங்க வைக்கின்றது.
என்றும் அழியாத ஓவியமாய் எம் மனதில்
உங்கள் நினைவிருக்கும், அணையாது, தேயாது
ஒருபோதும்
உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசம்...
உங்கள் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய
எல்லாம் வல்ல இறைவனை கரங்கூப்பி
மன்றாடுகின்றோம். ஆமென்