6ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மரிஸ்டெல்லா ஜோசப் ராஜன்
1934 -
2015
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காவலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஸ்ரெலா ஜோசப் ராஜன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஆறு
ஓடி மறைந்ததம்மா
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
வாழ்ந்த தேசம் விட்டு
எம்மோடு வாழ வந்த தாயே
வந்தொரு வார்த்தை பேசாது
வானுறைந்து விட்டீர்களே
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே..
விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் துயருறும்
டெல்மா(மகள்), ரவி(மருமகன்) மற்றும்
குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்