மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட உங்கள் நினைவுகள் இன்னும் பசுமையாகவே உள்ளது. காலனும் காலமும் செய்துவிட்ட துன்பியல் வேளையில் உறவுகளை ஆரத்தழுவி ஆறுதல் கூறமுடியாத கையறு நிலையில் நாம் இருப்பது வேதனையாக இருந்தாலும், உள்ளத்து உணர்வுகளை இணையத்தில் பகிர்வதில் ஓரளவேனும் நிறைவடைகிறோம். அன்னாரின் பிரிவினால் கலங்கி நிற்கும் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்,நண்பர்கள்,சுற்றத்தார் அனைவருக்கும் எமது குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக எல்லாம்வல்ல இறைவனை மனதுருகி இரைஞ்சுகிறோம். * பாசம் மாறா நீங்காப் பசுமையான நினைவுகளுடன்
நிறா குடும்பத்தினர்