யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், மவுண்கார்மேல் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மரியம்மா யோசப் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று தாயகத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் பிரான்சிஸ்கா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பெனடிக்ற் பெளஸ்தீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெனடிக்ற் யோசவ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றேமன் றோசன்(கட்டார் ), எட்மன் அசாந்தன்(நோர்வே), ஜெபநேசன்(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெனற் ஜெயவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அடைக்கலநாயகி (ராசராணி கட்டார்), றெபெக்கா(நோர்வே), சகாயராணி (பாப்பா டென்மார்க்), காலஞ்சென்ற சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சவரியம்மா(மொனிக்கம்மா), ஆரோக்கியநாதர் (டேவிட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செலஸ்தீனா, மேரிகெலன், புஸ்பம், அன்ரனிக் கிளைவ் மற்றும் றீற்றம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லெற்றீசியா (சாரதா நோர்வே), பெல்சியா (விஜிதா) ஆகியோரின் ஆசை பெரியம்மாவும்.
காலஞ்சென்ற திருமாவளவன்(திரு), திருச்செல்வி(பிரான்ஸ்), திருமங்கை, திருமாவளனி, திருச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
டிலான், அமலன், ஸ்ரெவ்னி, கிறிஸ்னி, ஜொனத்தன், நீக்லஸ், ரூபினி, கமிலஸ், தர்ஷினி, ஜெனக்சன், பாவாணன், அமுதினி, இளவெயினி, நிலோஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
இம்மனுவெல்லா, ஜெரமியாஸ், ஜெமமியா, எலியாஸ், Rakel, விக்ரோரியா, லூசியா, நோவா, ஜேம்ஸ், யொசபின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-01-2021 வியாழக்கிழமை யாழ். புனித யாகப்பர் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டு கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.