Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 11 JUN 1937
இறப்பு 13 OCT 2026
திருமதி மரகதம் பாலசிங்கம் 1937 - 2026 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரகதம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!

நீங்கள் மண்ணுலகை பிரிந்து
31 நாட்கள் சென்றதம்மா!
 என்ன நடந்தது ஏது நடந்தது என்று
கணக்கிட்ட நாட்கள் அதற்குள்
31 நாட்கள் ஆகி விட்டதே!

நீங்கள் மறைந்து 31 நாட்கள் ஓடி
மறைந்தாலும் உங்கள் ஒளிமுகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
 மகிழ்ந்திருந்தாய் அம்மா…

நிழற்குடையாய் எம்மை நித்தமும்
காத்தாய் விழி மூட மறுக்குதம்மா
உன் இமை மூடிப் போனதனால்
 அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.