1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 19 MAY 1944
உதிர்வு 09 DEC 2020
அமரர் மனோரஞ்சிதமலர் இளம்பூரணன் (Baby)
வயது 76
அமரர் மனோரஞ்சிதமலர் இளம்பூரணன் 1944 - 2020 ஏழாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோரஞ்சிதமலர் இளம்பூரணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.

எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மாசாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நாள் பிரார்த்தனை 09-12-2021 வியாழக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அவரது கல்லறையில் நடைபெற்று பின்னர் 11-12-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அந் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

கல்லறை முகவரி:
Glenview Memorial Gardens,
7541 Hwy 50,
Woodbridge,
ON L4H 4W7,
Canada.

மதிய போசனம் முகவரி:
16 Youngestar Trail,
Brampton,
ON L6P 1P5,
Canada.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 20 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 09 Jan, 2021